
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தோட்டக்கலை அலுவலர்களை பாதிக்க கூடிய உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0வை நிறுத்த வேண்டும், இதற்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் கருப்பசாமி, சிவகுமார், மோகன்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜூதீன், நிர்வாகி ரவிக்குமார் பங்கேற்றனர்.

