ADDED : நவ 23, 2026 09:39 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில் நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ரேஷன் கடை காலி பணியிடங்களில் மகளிர் சுயஉதவி குழுவினரை பணியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் மகாலிங்கம், சிறப்பு தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் அய்யனார், ஜெயபிரகாஷ், பாண்டி, காமாட்சி முருகேசன், முத்துராயர், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வன், மாநில தணிக்கையாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
