/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திராட்சையில் சாம்பல் நோயை தவிர்ப்பது எப்படி துணை இயக்குனர் ஆலோசனை
/
திராட்சையில் சாம்பல் நோயை தவிர்ப்பது எப்படி துணை இயக்குனர் ஆலோசனை
திராட்சையில் சாம்பல் நோயை தவிர்ப்பது எப்படி துணை இயக்குனர் ஆலோசனை
திராட்சையில் சாம்பல் நோயை தவிர்ப்பது எப்படி துணை இயக்குனர் ஆலோசனை
ADDED : டிச 23, 2024 05:53 AM
தேனி: 'திராட்சையில் ஏற்படும் சாம்பல் நோயை எவ்வாறு தவிர்க்கலாம்.' என, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.
மாவட்டத்தில் 1700 எக்டேர் பரப்பளவில் திராட்சை சாகுபடியாகிறது. இதில் பன்னீர், மஞ்சரிமெடிகா, சோனகாசீட்லெஸ், தாம்சன் சீட்லெஸ் போன்ற ரகங்கள் சின்னமனுார், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் அதிகம் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது திராட்சையில் சாம்பல், அடிச்சாம்பல் நோய் தாக்குகிறது. இந்நோய் பாதித்த திராட்சை கொடிகள் இலை கருகுகின்றன. இதனால் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குனர் நிர்மலா கூறியதாவது: திராட்சையில் சீதோஷ்ண நிலை காரணமாக சாம்பல் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இவை பூஞ்சை நோய்களாகும். இந்த வகை பூஞ்சைகளால் காய்கள், இலைகள் மீது சாம்பல் பற்றி படர்ந்து பயிர் வளர்ச்சியை பாதிக்கிறது. பூஞ்சைகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் மொட்டலாக்ஸில், மேன்கோசெப் மருந்து 0.3 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் கலந்து இலையின் அனைத்து பகுதியிலும் படும் வகையில் தெளிக்க வேண்டும்.
இம்மருந்துகளை 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்தால் திராட்சையில் சாம்பல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்., என்றார்.

