ADDED : ஏப் 29, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரளாவில் போதை பொருட்களின் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை தடுக்கும் வகையில் 'ஆப்ரேஷன் டி ஹண்ட்' என்ற பெயரில் போலீசார் மாநிலம் முழுவதும் முதல் கட்ட சோதனையை முடித்தனர்.
அதன் இரண்டாம் கட்டமாக போலீசார், எக்சைஸ் துறையினர் இணைந்து 'ஆப்ரேஷன் கிளீன் சிலேட்' என்ற பெயரில் சோதனை நடந்து வருகிறது.
அதன்படி மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாறு பகுதியில் மூணாறு எக்சைஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் சோதனை நடந்தது.
அதில் அங்குள்ள ஆற்றின் கரையோரம் 96 கஞ்சா செடிகளை கண்டு பிடித்து அழித்தனர். அதனை வளர்த்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

