/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பறிமுதல் செய்த 56 கிலோ புகையிலை அழிப்பு
/
பறிமுதல் செய்த 56 கிலோ புகையிலை அழிப்பு
ADDED : மார் 19, 2024 05:47 AM
தேனி : கடைகளில் இருந்து பறிமுதல் செய்த 56 கிலோ புகையிலை பொருட்களை உணவுப்பாதுகாப்புத்துறையினர் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.
தேனி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் 6 உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக தொடர் சோதனைகள் செய்து வந்தனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 66 கடைகள் சீல் வைக்கப்பட்டன.
இக்கடைகளுக்கு தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இக்கடைகளில் இருந்து 56 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அவற்றை உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், தேனி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் நகராட்சி குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டது.

