/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் கம்பத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கியது
/
நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் கம்பத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கியது
நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் கம்பத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கியது
நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் கம்பத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கியது
ADDED : ஜூலை 19, 2025 12:37 AM
கம்பம்: கம்பம் நகராட்சியில் தலைவர், கவுன்சிலர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் முடங்கியது. அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ளனர். நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த வனிதா, துணை தலைவர் சுனோதா உள்ளனர். இங்கு தி.மு.க. 24, அ.தி.மு.க. 7, காங். மற்றும் மு.லீக் தலா ஒருவர் என 33 கவுன்சிலர்கள் உள்ளனர். 2022 மார்ச்சில் கவுன்சில் பொறுப்பேற்றதில் இருந்து தலைவர், கவுன்சிலர்கள் இடையே பிரச்னைகள் இன்றி நிர்வாகம் சுமூகமாக நடந்து வந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பும் காட்டவில்லை.
ரூ.3.40 கோடி பணிக்கு சிக்கல் :
இந்நிலையில் தமிழ்நாடு சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 7.64 கி.மீ. தூரத்திற்கு ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் தெருக்களில் தார் ரோடு அமைக்கவும், சிறப்பு நிதியாக ரூ.69 லட்சத்தில் பேவர் பிளாக் பதிக்கவும் டெண்டர் விடப்பட்டது. பணிகளை எடுத்த ஒப்பந்தகாரர்கள் ஜூலை 10 ல் தார் ரோடு பணி துவக்க முயன்ற போது ஒட்டுமொத்தமாக தி.மு.க. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இணைந்து ரோடு அமைப்பதை தடுத்தனர். பழைய ரோட்டை தோண்டி போடவும், சாக்கடை கட்டவும் வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் அதற்கு விதிகளில் இடமில்லை என்றனர். கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாக ரோடு பணிகள் நிறுத்தப்பட்டது.
வளர்ச்சி பணிகள் நிறுத்தம்
நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்தகாரர்கள் அனைவரும் தங்களது பணிகளை நிறுத்தினர். இதனை தொடர்ந்து ஒப்பந்தகாரர்கள் நகராட்சி கமிஷனரை சந்தித்து பாதுகாப்பு கோரி கடிதம் வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நகரின் வளர்ச்சி பணிகள் ஸ்தம்பித்துள்ளது. மழை காலமாக இருப்பதால் ரோடுகள் பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இப் பிரச்னையால் நகராட்சி நிர்வாகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது.
தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை போக்க கமிஷனர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இருதரப்பினருக்கும் நிலைமையை விளக்கி சுமூகமாக நிர்வாகம் நடைபெற முயற்சிக்க வேண்டும்.