/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் ரூ.29 லட்சத்தில் வளர்ச்சி பணி
/
சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் ரூ.29 லட்சத்தில் வளர்ச்சி பணி
சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் ரூ.29 லட்சத்தில் வளர்ச்சி பணி
சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் ரூ.29 லட்சத்தில் வளர்ச்சி பணி
ADDED : மார் 03, 2024 12:07 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.29.60 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
ஊராட்சித் தலைவர் ரத்தினம் கூறியதாவது: இந்த ஊராட்சிக்குட்பட்ட சுடுகாடு ரோடு ரூ.11 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கரிசல்பட்டி காமாட்சி தெருவில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலும், எஸ்.ரெங்கநாதபுரம் நாட்டாமை தெருவில் ரூ.6.90 லட்சம் மதிப்பிலும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதே கிராமத்தில் ரூ.7.20 லட்சம் மதிப்பில் சிமென்ட் ரோடும் அமைக்கப்பட்டுள்ளது.
மலையாண்டிநாயக்கன்பட்டியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி சேதமடைந்துள்ளது. ஊராட்சியில் நிதி நிலை கிடைக்கப்பெற்றதும் இப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்படும். இவ்வாறு தெரிவித்தார்.