/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோக்சபா தேர்தலில் தோற்றாலும் அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பு திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
/
லோக்சபா தேர்தலில் தோற்றாலும் அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பு திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
லோக்சபா தேர்தலில் தோற்றாலும் அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பு திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
லோக்சபா தேர்தலில் தோற்றாலும் அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பு திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ADDED : அக் 16, 2024 05:10 AM

ஆண்டிபட்டி, : லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோற்றாலும் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமர், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் 75 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
ஜெயலலிதா தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்த போது 62 எம்.எல்.ஏ.,க்கள் தான் இருந்தனர். பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்., இன்று எந்த நிலையில் உள்ளார் என்பது உங்களுக்கு தெரியும். ஜாதி,மதம் பார்த்து இருந்தால் நான் யாருடன் துணை நின்று இருப்பேன் என உங்களுக்கு தெரியும். பழனிசாமி தான் பொதுச் செயலாளராக வரவேண்டும் என முதலில் கூறியது நான்தான்.
குற்றவாளிக்கு வரவேற்பு
ஊழல்வாதிகளை ஆதரிப்பவர் ஸ்டாலின் என்பதற்கு செந்தில் பாலாஜி ஓர் உதாரணம். குற்றவாளிக்கு வரவேற்பு கொடுக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்துவிட்டார்.
கையில் அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் அவரது மகனையும் துணை முதலமைச்சராக்கி உள்ளார். உதயநிதி மகனையும் அமைச்சர் ஆக்கிவிடுவார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில் 200 எம்.எல்.ஏ.,க்களுக்கு மேலாக பெற்று பழனிசாமி ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என பேசினார். அ.தி.மு.க.,நகர் செயலாளர் அருண்மதி கணேசன் நன்றி கூறினார்.