/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சம்பள உயர்வில் முரண்பாடு: தவிப்பில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள்
/
சம்பள உயர்வில் முரண்பாடு: தவிப்பில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள்
சம்பள உயர்வில் முரண்பாடு: தவிப்பில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள்
சம்பள உயர்வில் முரண்பாடு: தவிப்பில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள்
ADDED : செப் 14, 2025 03:48 AM
தேனி:காவல்துறையில் 1993ல் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்களை விட இரு ஆண்டுகளுக்கு பின்னால் 1995ல் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்கள் கூடுதல் சம்பளம் பெறுவதாக புலம்புகின்றனர்.தமிழகத்தில் 1993ல் 9ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் போலீஸ்காரர்களாக பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு 2018ல் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்குப்பின் 1995 பேட்ஜில் சேர்ந்தவர்களுக்கு 2020ல் சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றனர். தற்போது இரு பேட்ஜ்யை சேர்ந்தவர்களும் ஒரே விகித ஊதியம் பெறுகின்றனர். 1995ல் பேட்ஜ் போலீசாருக்கு ஆண்டு தோறும் ஜனவரியில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. 1993ல் சேர்ந்தவர்களுக்கு ஜூலையில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது இரு ஆண்டுகளுக்கு பின் பணியில் சேர்ந்த அவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
இது குறித்து 1993 பேட்ஜ் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது:
1995ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு 2025 ஜனவரியில் ரூ. 57,400 ஆக சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அதே ஜனவரியில் 1993ல் சேர்ந்தவர்களுக்கு ரூ.55,700 சம்பளம் பெற்றோம். ஆறு மாதங்களுக்கு பிறகு ஜூலையில் ரூ. 57,400 ஆக உயர்த்தப்பட்டது. இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும். 1993ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என அரசிற்கும், போலீஸ்துறைக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றனர்.