ADDED : டிச 09, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, டிச. 9 -
தேனி தாலுகா அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் துருப்பிடித்து வீணாகின்றன. இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு, குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட டூவீலர்கள், மாட்டு வண்டிகள், லாரிகள் தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் துருப்பிடித்து சேதமடைந்து வருகின்றன. சில வற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வருபவர்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகுகின்றனர். வீணாகும் வாகனங்களை வேறு இடங்களுக்கு மாற்றி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.