/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள்
/
மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள்
ADDED : அக் 24, 2025 02:48 AM

தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிச.3ல் கொண்டாடப் படுகிறது. அதற்காக மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
போட்டிகளை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
மாணவர்கள், மாணவிகள் பிரிவில் 100 மீ., குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு டிச.3ல் நடக்க உள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் துரைப்பாண்டி, சரவணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து இருந்தனர்.

