ADDED : டிச 18, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அரண்மனைப்புதுாரில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவநாச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை, சரண்டர் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் காளிராஜ், ஜோதிமுருகன், கருணாகரன் பங்கேற்றனர்.