/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீபாவளி பண்டிகையால் காட்டன் ரக சேலை உற்பத்தி, விற்பனையில் விறுவிறுப்பு இளம்பெண்களை கவரும் பல வண்ண சேலைகள் தயார்
/
தீபாவளி பண்டிகையால் காட்டன் ரக சேலை உற்பத்தி, விற்பனையில் விறுவிறுப்பு இளம்பெண்களை கவரும் பல வண்ண சேலைகள் தயார்
தீபாவளி பண்டிகையால் காட்டன் ரக சேலை உற்பத்தி, விற்பனையில் விறுவிறுப்பு இளம்பெண்களை கவரும் பல வண்ண சேலைகள் தயார்
தீபாவளி பண்டிகையால் காட்டன் ரக சேலை உற்பத்தி, விற்பனையில் விறுவிறுப்பு இளம்பெண்களை கவரும் பல வண்ண சேலைகள் தயார்
ADDED : செப் 21, 2025 12:30 AM
ஆண்டிபட்டி:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் உற்பத்தி, விற்பனையில் விறுவிறுப்பு நிலவுகிறது.
தேனி மாவட்டத்தில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், கொப்பையம்பட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம் ஆகிய ஊர்களில் கைத்தறி, பெடல் தறி, விசைத்தறிகள் மூலம் நெசவுத்தொழில் உள்ளது. கைத்தறிகளில் அரசின் இலவச சேலைகள் மட்டும் உற்பத்தி ஆகிறது.
பெடல் தறிகள், விசைத்தறிகளில் 60,80ம் நம்பர் நைஸ் ரக காட்டன் சேலைகள் பல டிசைன்களில் உற்பத்தி ஆகிறது. காட்டன் ரக சேலைகளுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருந்தாலும் தீபாவளி, தைப்பொங்கல் பண்டிகை காலங்களில் விற்பனை அதிகமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மூலம் விற்பனை ஆகிறது. ஆர்டர் மூலம் வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது.
இப்பகுதியில் பலரும் ஆன்லைன் மூலமும் காட்டன் சேலைகள் வியாபாரம் செய்கின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் காட்டன் சேலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. பயனாளிகள் தேவையை கருத்தில் கொண்டு பல வண்ணங்கள் பல டிசைன்களில் உற்பத்தியை தொடர்கின்றனர்.
காட்டன் சேலை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியை மையமாக வைத்து நெசவுத்தொழில் உள்ளது.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் தினமும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள் உற்பத்தி ஆகிறது. தற்போது செட்டிநாடு காட்டன், காஞ்சி காட்டன், புட்டா, கோர்வை கட்டம், கட்டம், சுங்குடி ரக சேலைகளை பலரும் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் ரூ.500 முதல் ரூ.2000 வரையிலான விலையில் ரகத்திற்கு தக்கபடி உள்ளன.
கடந்த காலங்களில் வயதானவர்களே காட்டன் ரக சேவைகளை அதிகம் பயன்படுத்தினர். இளைய தலைமுறை பெண்களுக்கு ஏற்றவாறு பல வண்ணங்கள் டிசைன்களில் சேலைகள் உற்பத்தி ஆகிறது. தற்போது உற்பத்தியாகும் சேலைகள் தேக்கமின்றி உடனுக்குடன் விற்பனையாவதால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் உள்ளனர்.