/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சியில் ரோடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்; தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கலெக்டர் ஆபீசில் மனு
/
தேனி நகராட்சியில் ரோடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்; தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கலெக்டர் ஆபீசில் மனு
தேனி நகராட்சியில் ரோடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்; தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கலெக்டர் ஆபீசில் மனு
தேனி நகராட்சியில் ரோடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வலியுறுத்தல்; தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கலெக்டர் ஆபீசில் மனு
ADDED : செப் 02, 2025 03:38 AM

தேனி : 'தேனி நகராட்சி பகுதியில் நடந்த ரோடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்', என தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் அய்யனார் பிரபு, கிருஷ்ணகுமாரி, நாகராணி , சுப்புலட்சுமி(காங்.,) ஆகியோர் வழங்கிய மனுவில், 'எங்கள் வார்டுகளில் பல இடங்களில் கடந்த வாரம் தார்ரோடு அமைக்கப்பட்டது. அந்த ரோடுகள் பல இடங்களில் சேதமடைந்து, தரமின்றி காணப்படுகிறது. கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் நேரில் ஆய்வு செய்து புதிதாக தார்ரோடு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றிருந்தது.
தேனி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணபிரபா மனுவில், தேனி நகர்முழுவதும் குப்பை முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. ஏலம் எடுத்த தனியார் நிறுவுனம் உரிய பணியாளர்களை வழங்காததால் இந்நிலை தொடர்கிறது. அ.தி.மு.க., காங்., கம்யூ., என பல கட்சிகள் சார்பில் நகராட்சியில் முறையிட்டும் பலனில்லை. ஏலம் எடுத்துள்ள தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.
நாடார் பேரவை, காமாட்சிபுரம் இந்து நாடார் உறவின் முறை உள்ளிட்ட பல்வேறு நாடார் சமுதாய அமைப்பினர் வழங்கிய மனுவில், 'வைகை அணைப்பகுதியில் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை, மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'
ஆக்கிரமிப்பால் சிரமம்:
ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி ஆதிதிராவிடர் தெரு இந்துமதி உள்ளிட்டோர் பொதுமக்கள் சார்பில் வழங்கிய மனுவில், தெருவில் பலர் ரோட்டை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருவிளக்கு, ரோடு, சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். என்றிருந்தது.
மார்க்கையன் கோட்டை பேரூராட்சி 2வது வார்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் சார்பாக தேவி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், குடியிருப்பு பகுதிக்கு மின்வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரினர்.