/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்ட், மூன்றாந்தலில் மதுபார்களை மாற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் நகராட்சி கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
பஸ் ஸ்டாண்ட், மூன்றாந்தலில் மதுபார்களை மாற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் நகராட்சி கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பஸ் ஸ்டாண்ட், மூன்றாந்தலில் மதுபார்களை மாற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் நகராட்சி கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பஸ் ஸ்டாண்ட், மூன்றாந்தலில் மதுபார்களை மாற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் நகராட்சி கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஆக 08, 2025 03:19 AM

பெரியகுளம்,: பெரியகுளம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபார்களை மாற்றக்கோரி தி.மு.க., கவுன்சிலர் ஆபிதாபேகம் 20 நிமிடங்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். 'உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன்' என, ஆவேசத்துடன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.
இந்நகராட்சியின் கவுன்சில் கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா, மேலாளர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் அசன்முகமது, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஆபிதாபேகம் (தி.மு.க.,): பஸ் ஸ்டாண்ட் அருகே பள்ளிக்கூடம், நுாலகம், பள்ளிவாசல், குடியிருப்புகள் உட்பட பல்வேறு முக்கிய பகுதியில் தனியார் மதுபாரினால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதே நிலை மூன்றாந்தல் பகுதியில் தனியார் மதுபார் அருகே உள்ளது. இவ்விரண்டு பாரையும், வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இதற்கு சிறப்பு தீர்மானம் கொண்டு வாருங்கள். இல்லையேல், 'உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பேன்.' என, 20 நிமிடங்கள் கீழே உட்கார்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். இவருக்கு ஆதரவாக தி.மு.க., கவுன்சிலர்கள் முகம்மது அலி, சாஹிராபானு, வி.சி., கட்சி கவுன்சிலர் பவானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கிஷோர்பானு பேசினர்.
தலைவர்: அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மதன்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூ.,): உங்களோடு ஸ்டாலின் முகாம்கள் நடைபெறுவது குறித்து நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கலந்து ஆலோசனை செய்வதில்லை. கவுன்சிலர்களுக்கு தெரியாததால் வார்டு மக்களுக்கு தெரிவிக்க முடியவில்லை. இந்த திட்டத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்களை ஏற்க வேண்டும். அதன்பிறகு மனுக்களை நிராகரிக்க வேண்டும். அதற்குரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்திலேயே மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது.
தலைவர்: இனிவரும் முகாம்களில் கவுன்சிலர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும் வகையில் விளம்பரம் செய்யப்படும்.
மணி வெங்கடேசன் (அ.ம.மு.க.,): ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை நகராட்சி கழிவுநீர் உந்து நிலையத்திற்கு வாகனங்களில் கொண்டு வருகின்றனர். அவர்களிடம் குறைந்த கட்டணமாக ரூ.200 முதல் ரூ. 400 மட்டுமே வாங்குகின்றனர். ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.2 ஆயிரம் கட்டணமாக வாங்கினால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.
நாகபாண்டி (பார்வர்டு பிளாக்): வாகம்புளியில் ஆண்கள் சுகாதார வளாகம் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியங்கா (தி.மு.க.,): மார்க்கெட் பகுதியில் காய்கறி, மளிகைக் கடை உட்பட கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொது மக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
கமிஷனர்: மார்க்கெட் பகுதியில் முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் 23, 25 வார்டு பகுதிகளில் 110 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது உட்பட 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.--