ADDED : பிப் 18, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தேனி என்.ஆர்.டி., நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது.
ராஜ்யசபா எம்.பி., இளங்கோவன் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் மாநில இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார், நகர செயலாளர் நாராயணபாண்டியன், போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன், ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.