/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 08, 2025 01:57 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் ஒன்றிய, நகர தே.மு.தி.க., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.பொம்மிநாயக்கன்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடந்தது.
தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் செந்தில்குமார், ஆண்டிபட்டி வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், சதீஷ் கதிர்வேல், நகர செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும், வரும் சட்டசபை தேர்தல் பணிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. தேனி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்திரமதி, ஆண்டிபட்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் குமரவேல், தே.மு.தி.க., பேச்சாளர் சுந்தரவடிவேல், நகர துணை செயலாளர் தங்கவேல், ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய பொருளாளர் சேட் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

