/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மகளிரணி தலைவி சாடல்
/
மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மகளிரணி தலைவி சாடல்
மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மகளிரணி தலைவி சாடல்
மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் பா.ஜ., மகளிரணி தலைவி சாடல்
ADDED : பிப் 17, 2025 01:09 AM
சின்னமனுார்: ''மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் செய்து வருகிறது,'' என, தேனி மாவட்டம் சின்னமனுாரில் நடந்த மத்திய அரசு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மாநில மகளிரணி தலைவி உமாரதி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: எட்டாவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநிலங்களும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என தி.மு.க.,வினர் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.62 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார்.
நகரங்கள் மட்டுமின்றி குக்கிராமங்களில் உள்ளவர்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறுவதற்காக 'ஜல் ஜீவன்', 'அம்ரூத்' என்ற திட்டங்களை அறிமுகம் செய்து இலவசமாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் அறிவிக்கப்படும் ரயில்வே திட்டங்களுக்கு இடங்களை கையகப்படுத்தி தருவதில் தொடர்ந்து மாநில அரசு தாமதம் செய்கிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், முத்ரா வங்கி கடன் திட்டத்தில் தமிழகம் தான் அதிகம் பயன் பெற்றுள்ளது. சிறு, குறு தொழில் துவங்க அதிகமான நிதியை இங்குள்ளவர்கள் தான் பெற்றுள்ளனர்.
ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற மக்கள் போற்றும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும் நடக்கின்றன. இந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கை இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் என்றார்.

