/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டுத்தோட்டம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் தம்பதி உரமாகும் காய்கறி கழிவுகள்
/
வீட்டுத்தோட்டம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் தம்பதி உரமாகும் காய்கறி கழிவுகள்
வீட்டுத்தோட்டம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் தம்பதி உரமாகும் காய்கறி கழிவுகள்
வீட்டுத்தோட்டம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் தம்பதி உரமாகும் காய்கறி கழிவுகள்
ADDED : ஏப் 14, 2025 05:58 AM

இன்றைய சூழலில் செயற்கை உரங்கள், மருந்துகள் பயன்பாடு இன்றி காய்கறிகள் பழங்கள் உற்பத்தி செய்வது கடினம்.இயற்கை உரங்கள் பயன்படுத்தி அதிக அளவில் காய்கறிகள்,பழங்கள்உட்படவேளாண் பொருட்களை உற்பத்தி செய்வதில் செலவு அதிகம். இதனால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைப் பொருட்களின் விலையும் அதிகம். குறைவான உற்பத்தி, விலை அதிகம் என்பதால் விற்பனை செய்வதில் தாமதம் உள்ளிட்டகாரணங்களால்,பெரும்பாலான விவசாயத்தில் செயற்கை உரம், மருந்துகள் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது.
வீடுகள், மாடிகளில் உள்ள சிறிய இடத்திலும் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து பயன்பெறலாம் எனவிழிப்புணர்வு ஏற்பட்டு, அதிகளவில் தற்போது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சமையலுக்குதேவையானவற்றை தங்கள் வீடுகளில், தாங்களே உருவாக்கிக்கொள்ளுதல், அவற்றை பராமரிக்கும் போது குடும்பத்தினருடன் அதிகம் பேசுவதற்கு நேரம் கிடைப்பதுடன், மன அமைதி கிடைப்பதாக கூறுகின்றனர்.அந்த வகையில்தேனியில் வீட்டு தோட்டம் அமைத்து, தங்கள் வீடுகளில் உருவாகும் காய்கறி கழிவுகளை உரமாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் டாக்டர்கள் பிரபு சங்கர், ரேணுகா தம்பதியினர்.தேனி சடையால் தெருவில் வசிக்கும்இவர்களதுவீட்டின்அருகில் உள்ள சிறிய இடத்தில் துளசி, நெல்லி, செம்பருத்தி, எலுமிச்சை, வெற்றிலை, வல்லாரைகீரை, பசலைக்கீரை, சீத்தா, வாழை, சப்போட்டா, பப்பாளி, கறிவேப்பிலை, மருதாணிவளர்க்கின்றனர். இதுதவிரதொட்டிகளில் அலங்கார தாவரங்கள் வளர்த்து பராமரிக்கின்றனர்.
ஆர்வம் இருப்பதால் சாத்தியம்
டாக்டர் ரேணுகா, தேனி: சிறுவயதில் இருந்தே நண்பர்கள் வீட்டில் என்னென்ன செடிகள் வளர்க்கிறார்கள் என கேட்போம். உதாரணமாக அனைவர் வீட்டில் கத்தரி செடி வளர்க்கிறோம் என்றால் யார் வீட்டில் அதிக காய் உற்பத்தி செய்கிறோம் என போட்டி போடுவோம். விவசாயத்தில் ஈடுபட முடியவில்லை என்றாலும் செடிகள் வைத்து பராமரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தேவையான விதைகளை அருகில் உள்ள கிராமங்கள், ஆன்லைன் மூலம் வாங்குகிறேன். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பேசும் போது அவர்கள் கூறும் சில வழிமுறைகளை தோட்ட பராமரிப்பிற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். தெரிந்தவர்களிடம் கூறி, எரு உரம் வாங்கி பயன் படுத்துகிறேன். எம்.சுப்புலாபுரம் ஊராட்சியில் தயாரிக்கப்படும் உரத்தை வாங்கி பயன்படுத்தினேன். தோட்டத்தில் தண்ணீர் தேங்க விடமால் பார்த்துக் கொள்வேன்., என்றார்.
புத்துணர்ச்சி த ரும் துளசி டீ
டாக்டர் பிரபு சங்கர், தேனி: வீட்டருகில் உள்ள இடத்தில் 5 ஆண்டுகளாக வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறோம். முதலில் சப்போட்டா, சீத்தா மரக்கன்றுகள் மட்டும் இருந்தன. மனைவி ரேணுகாவிற்கு தோட்ட பராமரிப்பில் ஆர்வம் இருந்ததால் அதிக செடிகள் நடவு செய்து பராமரித்தார். அவருடன் இணைந்து நானும், குழந்தைகளும் செடிகள் பராமரிப்பில் ஈடுபடுவோம். அதிக அளவில் துளசி செடிகள் வைத்துள்ளோம். துளசி பயன்படுத்தி இரு தினங்களுக்கு ஒருமுறை துளசி டீ தயாரித்து அருந்துவோம். இந்த டீ அருந்துவதால் எப்போதும் உற்சாகமாகவும், சோர்வு இன்றி இருக்க உதவுகிறது. மேலும் வீட்டு காய்கறி கழிவுகள், மரத்தில் இருந்த உதிர்ந்த இலைகளை ஓரிடத்தில் குழிதோண்டி புதைக்கின்றோம் அதனை சிறிது நாட்களுக்கு பிறகு எடுத்து உரமாக பயன்படுத்துகின்றோம்.
தெருவில்உள்ள வீடுகளில் கொசுத் தொல்லை என கூறினா லும், எங்கள் வீட்டில் கொசுத்தொல்லை இல்லை. வீட்டு முன் வைத்துள்ள அலங்கார தாவரங்கள், சில மூலிகை செடிகளால் கொசுக்கள் வீட்டிற்குள் வராது என வீட்டிற்கு வந்த ஆசிரியர் ஒரு முறை கூறினார். எங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குழந்தைகளுடன் இணைந்து தோட்டத்தை பராமரிப்பது மனமகிழ்வை ஏற்படுத்துகிறது., என்றனர்.