ADDED : ஜன 25, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஒன்றியம் பூதிப்புரம் நஞ்சுண்டேஸ்வர் ஆட்டோ நிலையம் சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் ஹிந்து ஆட்டோ முன்னணி மாநில துணை தலைவர் கார்த்திக் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடவும், மது குடித்து ஆட்டோக்களை இயக்கக்கூடாது. பேட்ஜ்' உரிமம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஜன., 28 ல் வேலுாரில் நடக்கும் ஹிந்து ஆட்டோ முன்னணி மாநில பொதுக்குழுவில் ஒவ்வொரு ஆட்டோ நிலையத்திற்கும் மூன்று பேர் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.