/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் குப்பை கொட்டாதீர்கள் சாரல் விழாவில் கலெக்டர் வேண்டுகோள்
/
சுருளி அருவியில் குப்பை கொட்டாதீர்கள் சாரல் விழாவில் கலெக்டர் வேண்டுகோள்
சுருளி அருவியில் குப்பை கொட்டாதீர்கள் சாரல் விழாவில் கலெக்டர் வேண்டுகோள்
சுருளி அருவியில் குப்பை கொட்டாதீர்கள் சாரல் விழாவில் கலெக்டர் வேண்டுகோள்
ADDED : செப் 29, 2024 05:59 AM

கம்பம், : சுற்றுலா தலமான சுருளி அருவியில் குப்பை கொட்ட கூடாது அருவியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என சாரல் விழாவில் கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தார்.
சுருளி அருவியில் சாரல் விழா நேற்று காலை துவங்கி வைத்து கலெக்டர் ஷஜீவனா பேசியதாவது :
சாரல் விழா அக். 2 வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது . இந்தாண்டு மழை அளவு குறைவுவால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இது வனப்பகுதி என்பதால் வன உயிரின நடமாட்டம் உள்ளது. நேற்று வந்த போது இப்பகுதியில் குப்பை அதிகம் இருந்தது. தன்னார்வலர்கள் மூலம் சுத்தம் செய்தோம். ஒருவர் குப்பையை ஒரு இடத்தில் போட்டால் இங்கு வரும் மற்றவர்களும் அதே இடத்தில் போடுவார்கள். இது சுற்றுலா தலம். இதை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பாகும். எனவே இங்கு குப்பைகளை போடாதீர்கள். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் 5 நாட்களுக்கும் நுழைவு கட்டணம் ரத்து என்ற அறிவிப்பை வனத்துறையினர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது- என்றார்.
நிகழ்ச்சியில் மேகமலை புலிகள் காப்பக துணை வார்டன் ஆனந்த் , மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, ஆர்.டி.ஒ. தாட்சாயணி, டி.எஸ்.பி. செங்கோட்டு வேலன், ஒன்றிய தலைவர் பழனி மணி , ஊராட்சி தலைவர் நாகமணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, வேளாண் வணிக துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஸ்டால்கள் அமைத்திருந்தனர். - தோட்டக்கலைத் துறை சார்பில் கத்தரிகாய்களால் செய்யப்பட்ட வரையாடு பார்வையாளர்களை கவர்ந்தது.
சித்தா சார்பில் முடக்கத்தான் சூப், சோம்பு சூப், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் முருகன், சித்தா டாக்டர் சிராசுதீன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சாரல் விழா தகவல் பொதுமக்களுக்கு சென்றடையாததால், மிக குறைவாக பொதுமக்கள் கூட்டம் இருந்தது.
அனுமதி நேரம் குறைப்பு
சுருளியில் வன உயிரினங்கள் நடமாட்டம் உள்ளதால் இந்தாண்டு மதியம் 3:00 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ள வனத்துறை கேட்டுக் கொண்டனர். இதனால் பொதுமக்கள் 3 மணிவரை நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என கலெக்டர் தெரிவித்தர்.