/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
‛'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பற்றி அச்சம் அடைய வேண்டாம்; தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் தகவல்
/
‛'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பற்றி அச்சம் அடைய வேண்டாம்; தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் தகவல்
‛'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பற்றி அச்சம் அடைய வேண்டாம்; தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் தகவல்
‛'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பற்றி அச்சம் அடைய வேண்டாம்; தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் தகவல்
ADDED : ஜன 03, 2025 06:36 AM

'டிக்'என அழைக்கப்படும் செடிகள், புதர்களில் வளரும் ஒட்டுண்ணியால் மனிதர்களுக்கு பரவும் 'ஸ்க்ரப் டைபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சல் அதிகரித்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள், தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கேரளாவின் ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் பெண்கள் முன் எச்சரிக்கையாக இருப்பதுடன்,மக்கள் தாங்கள் வீட்டின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து கொள்வது மிக அவசியம். என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஒட்டுண்ணிகளால் பரவும் ஸ்க்ரப் டைபஸ்'என்ற காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுப்பது அவசியம் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துசித்ரா தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக அளித்த பேட்டி.
டிக் காய்ச்சல் ஏதனால் ஏற்படுகிறது.
டிக் (Tick) என அழைக்கப்படும் ஒரு வகை ஒட்டுண்ணி செடி, கொடிகள், தாவரங்களில் வளரும். இதனை அறியாமல் விவசாயம் செய்யும் மக்கள், வேளாண் கூலித்தொழிலாளியாக கேரளாவில் ஏலத்தோட்டங்களுக்கு செல்லும் ஏழை பெண் தொழிலாளர்கள் வீட்டின் அருகே புதர் மண்டி இருந்து சுகாதாரமாக இல்லாதபோதும், இப் பூச்சியின் எச்சம் நம் உடலின் மீது பட்டாலோ, கடித்தாலோ, கால், கைகளில் சிகரெட்டால் சுட்ட வடு போன்று தடிப்புகள் ஏற்படும். பின் வைரஸ் கிருமி உடலில் உட்புகுந்து காய்ச்சல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.
தோட்டங்களில், புதர் மண்டிய செடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக டிக் ஓட்டுண்ணிகள் பரவமாமல் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகள், பெரியவர்களை செடி கொடிகள், புதர் மண்டியஇடங்களுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதனால் காய்ச்சல், தலைவலி,உடல்சோர்வு, தடிப்புகள் ஏற்படும்.
இவ்வகை பாதிப்பு மாவட்டத்தில் உள்ளதா
கடந்த ஓராண்டில் அனைத்து வகை காய்ச்சல் அறிகுறி,வைரஸ் பாதிப்பு இருந்தவர்கள் 1948 பேரின் ரத்த மாதிரிகள்ஆய்வு செய்யப்பட்டு அதில் 207 பேருக்கு காய்ச்சல் இருப்பதை எலிசா ரத்தப் பரிசோதனை, மூலக்கூறுவாயிலாக உறுதி செய்துள்ளோம். கடந்த 3 மாதங்களில் 584 பேருக்கு பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு, அதில் 84 பேர் தொற்று உறுதியாகி உள்ளது. இவ்வகை பாதிப்பு குழந்தைகள், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றுப்புற சூழலைசுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகள் வீட்டில் வளர்த்தால்அதில் ஒட்டுண்ணிகள் பரவாமல் இருக்குமாறு பராமரிப்பது அவசியம்.
சிகிச்சை முறைகள் பற்றி
மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலில் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டு அசித்ரோமைசின்,டாக்ஸிசைக்ளின் என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அளித்து சிகிச்சை அளித்துவருகிறோம். உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்பு இருப்பதை உறுதி செய்தால், ரத்த நாளங்கள் வழியாக திரவ மருந்துகள் செலுத்தியும் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளன. அதனால் பொது மக்கள், கூலித்தொழிலாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை., என்றார்.