/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் 3 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்
/
கூடலுாரில் 3 நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்
ADDED : ஜன 25, 2024 05:57 AM
கூடலுார்; லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் (ஜன.26) மூன்று நாட்களுக்கு குடிநீர் சப்ளை இருக்காது என கமிஷனர் காஞ்சனா அறிவித்துள்ளார்.
கமிஷனர் கூறியதாவது: லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்து நீர்த்தேக்க தொட்டி மூலம் கூடலுார் நகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சில நாட்களாக பம்பிங் மோட்டாரில் மண் மேவி பம்பிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பம்பிங் ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை முதல் (ஜன. 26) ஜன.28 வரை மூன்று நாட்கள் கூடலுார் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் குடிநீர் சப்ளை இருக்காது. அதனால் தேவையான குடிநீரை மக்கள் சேகரித்து வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். என்றார்.