ADDED : பிப் 05, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி காளியநாயக்கர் புளியமரத்தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் 38. அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யோகேஷ்வரன் 33. இருவரும் காட்ரோடு பிரிவு ஸ்டாண்ட்டில் ஆட்டோ ஓட்டுகின்றனர். இவர்களுக்கிடையே தொழில் போட்டியால் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் ஆட்டோவில் கெங்குவார்பட்டிக்கு வந்து கொண்டிருந்த பாண்டியராஜனை,
யோகேஷ்வரன் இவரது நண்பர்கள் முத்துராஜ், முத்துப்பாண்டி, பாண்டி ஆகியோர் வழிமறித்து தாக்கினர். இதில் யோகேஷ்வரன் கத்தியால் பாண்டியராஜனை குத்தினார். தேவதானப்பட்டி போலீசார் யோகேஷ்வரனை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.