/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜூலை 26, 2025 04:17 AM
உத்தமபாளையம்: போதைப் பொருட்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் உத்தமபாளையம் காஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவிகள் கிராமங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர்.
உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லுாரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.
போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள், பொருளாதார பாதிப்புகள், சமூக பாதிப்புகள், குடும்ப உறுப்பினர்களின் உளவியல் தாக்கங்கள் போன்றவைகள் குறித்து மாணவிகள் உ.புதுார், அம்பாசமுத்திரம், அம்மாபட்டி, மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்ற பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக பிரசார பயணத்தினை கல்லுாரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். மாணவிகள் பொது மக்களுக்கு வழங்கிய துண்டு பிரசுரங்களில், 'கல்வியால் நிமிர்', 'போதையில் பாதை மாறாதே' போன்ற வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தன.
பிரசாரத்திற்கு ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்கத்தின் தலைவர் ரேஷிமா, உறுப்பினர் ரிஜ்வானா செய்திருந்தனர்.

