/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துபாய் உணவு பொருள் கண்காட்சி; இந்திய ஏலக்காய் ஆர்டர்கள் குறைவு
/
துபாய் உணவு பொருள் கண்காட்சி; இந்திய ஏலக்காய் ஆர்டர்கள் குறைவு
துபாய் உணவு பொருள் கண்காட்சி; இந்திய ஏலக்காய் ஆர்டர்கள் குறைவு
துபாய் உணவு பொருள் கண்காட்சி; இந்திய ஏலக்காய் ஆர்டர்கள் குறைவு
ADDED : பிப் 23, 2024 05:37 AM
கம்பம்: துபாயில் ஒரு வாரமாக நடைபெற்ற உணவு பொருள் கண்காட்சியில் இந்திய ஏலக்காய்க்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ஏலக்காய்க்கு வளைகுடா நாடுகளான துபாய், கத்தார், அபுதாபி, குவைத் போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.
அங்கு வீடுகளில் குடிக்கும் காபா என்ற பானம் ஏலக்காயிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்திய ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்துவது, கவுதிமாலா நாட்டு ஏலக்காய் விலை குறைவாக கிடைப்பது போன்றவற்றால் சில ஆண்டுகளாக இந்திய ஏலக்காயை வாங்குவதை குறைத்துள்ளனர்.
இந்நிலையில் துபாயில் ஒரு வாரமாக உணவு பொருள் 24 என்ற கண்காட்சி நடைபெற்றது. சர்வதேச நாடுகளிலிருந்து பல்வேறு வகையான உணவு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன . இந்திய ஏலக்காயும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து ஏலக்காய் முன்னணி ஏற்றுமதியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர். தற்போது நிலவும் விலை குறைவால் இந்திய ஏலக்காய்க்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்தாண்டு கவுதி மாலா நாட்டிலிருந்து கொள்முதல் செய்த 40 ஆயிரம் மெ.டன் ஏலக்காயில் மீதம் இருப்பு இருப்பதால், பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைக்கவில்லை என்றும், ஒன்றிரண்டு ஆர்டர்கள் மட்டும் கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால் பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்ற இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வடமாநிலங்களில் விவசாயிகள் ஸ்டிரைக் காரணமாக போக்குவரத்து பிரச்னை இருப்பதால் விலை அதிகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.