/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை
/
ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை
ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை
ரோடு வசதி இன்றி சிறுவனை டோலியில் துாக்கி வந்து சிகிச்சை
ADDED : ஏப் 11, 2025 05:17 AM
--பெரியகுளம்: சொக்கன் அலையிலிருந்து கண்ணக்கரைக்கு ரோடு வசதி இல்லாததால் மரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் ரஜினி டோலி கட்டி தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரம் சோத்துப்பாறை அணை உள்ளது. அங்கிருந்து அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கரை 6 கி.மீ., தூரத்திற்கு ரோடு உள்ளது. இதே ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கன் அலையிலிருந்து, கண்ணக்கரைக்கு 2 கி.மீ., தூரத்திற்கு ரோடு வசதி இல்லை.
இந்நிலையில் சொக்கன்அலை பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் மகன் ரஜினி 9. சொக்கன்அலை தோட்டத்தில் மரத்திலிருந்து விழுந்து காயமடைந்தார்.
பெரியகுளம் மருத்துவமனையிலிருந்து சென்ற ஆம்புலன்ஸ் கண்ணக்கரை வரை சென்றது. காயமடைந்த சிறுவனை உறவினர்கள் 5 கி.மீ., தூரம் டோலி கட்டி தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
ரோடு வசதி இல்லாததால் பழங்குடியினர் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ரோடு வசதி செய்து தர கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-