/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் தேங்கும் கழிவு நீர் க.புதுப்பட்டியில் சுத்திகரிக்காத குடிநீர் வினியோகிக்கும் அவலம்
/
சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் தேங்கும் கழிவு நீர் க.புதுப்பட்டியில் சுத்திகரிக்காத குடிநீர் வினியோகிக்கும் அவலம்
சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் தேங்கும் கழிவு நீர் க.புதுப்பட்டியில் சுத்திகரிக்காத குடிநீர் வினியோகிக்கும் அவலம்
சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் தேங்கும் கழிவு நீர் க.புதுப்பட்டியில் சுத்திகரிக்காத குடிநீர் வினியோகிக்கும் அவலம்
ADDED : மார் 02, 2024 04:16 AM

கம்பம், :க.புதுப்பட்டி பேரூராட்சியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. விரிவாக்க பகுதியில் தார்ரோடு வசதியின்றி தெருக்கள் குண்டும், குழியுமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
க. புதுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியின் உட்கடை பகுதிகளாக 2 கி.மீ. தூரத்தில் இந்திரா காலணி, கோசேந்திரஒடை குடியிருப்புகள் உள்ளன. இவ்வூரின் முக்கிய வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் பழுதடைந்துள்ளது. இங்கு ஒரு பகுதியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம், மறு பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாற்றிலிருந்து குடிநீர் பம்பிங் செய்து சுத்திகரிப்பு செய்யாமல் சப்ளை செய்கின்றனர்.
பெண்கள் பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கட்டடங்கள் சேதமடைந்து உள்ளது. பள்ளிவாசல் வடக்கு பக்கம் உள்ள கழிப்பறை, நெடுஞ்சாலையில் பள்ளியை ஒட்டியுள்ள கழிப்பறை, காமராஜர் நகர் கழிப்பறை, மாணவர் விடுதிக்கு அருகில் உள்ள கழிப்பறைகள் பயன்படுத்த லாயக்கற்றதாக உள்ளது. தற்போது குழாய் பதிப்பதற்காக அனைத்து வீதிகளிலும் பள்ளம் தோண்டியுள்ளனர். இதில் வீதிகளில் இருந்த பேவர் பிளாக் கற்களை பெயர்த்து பக்கவாட்டில் வைத்துள்ளனர். இவற்றை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு பயன்படுத்த தூக்கி செல்கின்றனர்.
கலெக்டர் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு அகற்ற தயக்கம் கோசேந்திர ஓடை குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் நெடுஞ்சாலைக்கு வருகிறது. 200 குடும்பங்கள் உள்ள இப்பகுதியில் பெண்கள் பொது கழிப்பறை இன்றி சிரமம் அடைகின்றனர். இங்கு சாக்கடை சுத்தம் செய்வது, குப்பை சேகரிப்பு பணிகள் சுணக்கமாக உள்ளது. ஜல்ஜீவன் குடிநீர் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. கோசேந்திர ஓடை 2 கி.மீ. தூரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து,ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டும் பேரூராட்சி தயக்கம் காட்டி வருகிறது. குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
பரமேஸ்வரன், க. புதுப்பட்டி : சுத்திகரிக்கப்படாத குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கின்றனர். தற்போது ஜல் ஜீவன் திட்டத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக கூறுகின்றனர்.
அனைத்து பகுதிகளிலும் சீராக சப்ளை செய்ய வேண்டும். துாய்மை பணி முறையாக நடைபெறததால் கிராமமே சுகாதார சீர்கேட்டில் தவிக்கிறது. பெண்கள் கழிப்பறைகளை அடிக்கடி பராமரிக்க வேண்டும். மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை தேவை.
குண்டும் குழியுமான ரோடு
தனுஷ்கோடி, க. புதுப் பட்டி : புதுப்பட்டி பேரூராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட விரிவாக்க பகுதியான எஸ்.டி.கே. நகரில் இதுவரை தார் ரோடு அமைக்கவில்லை. மண் சாலையாகவே உள்ளது. மழை பெய்தால் நடக்க முடியாது.
பாதாள சாக்கடை அமைக்க தோண்டியதை தற்காலிகமாக மூடி உள்ளனர். ஆங்காங்கே உள்ள பள்ளத்தில் தினமும் பொதுமக்கள் விழுந்து காயத்துடன் செல்கின்றனர். பெண்கள் பொதுக் கழிப்பறை இங்கு அமைக்காததால் சிரமம் அடைகின்றனர்.பேரூராட்சியில் நிலவும் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து செயல் அலுவலர் பதிலளிக்கவில்லை.

