ADDED : ஆக 03, 2026 12:14 AM

தேனி: தேனி போலீஸ் குடியிருப்பு அருகே வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தினமும் குடியிருப்பில் சேகரிக்கப்படும் குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றாமல் குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதியில் கொட்டுகின்றனர். மேலும் வாரத்திற்கு 2 முறை குப்பைக்கு தீ வைக்கின்றனர். இதனால் குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல் ஏற்பட்டுஅவதி அடைகின்றனர். காற்றின் வேகத்தில் பாலித்தீன் பைகள் குடியிருப்புகளுக்குள் பறப்பதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், தங்கள் எல்லைக்குள் குடியிருப்பு இல்லை என நகராட்சியும், வடபுதுப்பட்டி ஊராட்சியை காரணம் காட்டுகின்றனர். இதனால் குப்பை பிரச்னை முடிவு எட்டாமல் உள்ளது.
