/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிரந்தர சி.இ.ஓ., நியமனம் இன்றி கல்வித்துறை பணிகளில் தொய்வு
/
நிரந்தர சி.இ.ஓ., நியமனம் இன்றி கல்வித்துறை பணிகளில் தொய்வு
நிரந்தர சி.இ.ஓ., நியமனம் இன்றி கல்வித்துறை பணிகளில் தொய்வு
நிரந்தர சி.இ.ஓ., நியமனம் இன்றி கல்வித்துறை பணிகளில் தொய்வு
ADDED : ஆக 22, 2025 02:42 AM
தேனி: தேனி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நிரந்தர சி.இ.ஓ., இல்லாததால் ஆய்வு மற்றும் அலுவல் பணிகள் தாமதமாகும் நிலை உருவாகி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்துதல், அரசு உத்தரவுகளை பள்ளிகளில் செயல்படுத்துவதில் முதன்மை கல்வி அலுவலர் பங்கு முக்கியமானதாகும். இம் மாவட்டத்தில் சி.இ.ஓ.,வாக பணிபுரிந்த இந்திராணி ஜூலை 31ல் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பின் திண்டுக்கல் சி.இ.ஓ., உஷா கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். அவரும் வாரத்திற்கு ஒரிரு நாட்கள் மட்டும் தேனி வந்து செல்கிறார். இவர் 50 நாட்களாக கூடுதல் பொறுப்பில் உள்ளார்.
50 நாட்களாகியும் மாவட்டத்திற்கு சி.இ.ஓ., நியமிக்காததால் கல்வித்துறை பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக பள்ளிகளில் ஆய்வு, மாணவர்களின் கல்வித்தரம் ஆய்வு, அலுவல் பணிகள் உள்ளிட்டவை தேக்க நிலை உள்ளது. எனவே, நிரந்த சி.இ.ஓ., நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.