ADDED : ஜூலை 30, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனியில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில், 31 கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. சமூக ஆர்வலர் ராஜா, கூட்டமைப்பின் தலைவர் ராஜன் ஆகியோர் வரவேற்றனர். தங்ததமிழ்செல்வன் எம்.பி., தலைமை வகித்தார். சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இருவரும் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.
நிழற்குடை அறக்கட்டளை நிர்வாகிகள் பிரசன்னா, ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.