/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து காயமடைந்த முதியவர் பலி
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து காயமடைந்த முதியவர் பலி
ADDED : ஆக 24, 2025 03:52 AM
கம்பம்: கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்த போது எதிர்பாராதவிதமாக வெடித்து காயமடைந்த முதியவர் குருநாதன் 67, தேனி மருந்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கம்பம் வடக்குபட்டியில் உள்ள ஜல்லிகட்டு தெரு, தங்க விநாயகர் கோயில் அருகில் வசித்தவர் குருநாதன்.இவர் வனப்பகுதிகளில் வேட்டைக்கு செல்வது வழக்கம். இதற்காக வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
குருநாதன் ஆக. 19ல் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிந்த போது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் குருநாதன் பலத்த காயமடைந்து இடது கையில் இருந்த 4 விரல்கள் காயமடைந்தன.
அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த குருநாதனின் பேரன்கள் நித்திஷ் 7, அபிநவ் 5, இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த போது வீட்டில் வேறு யாரும் இல்லை.
வெடி குண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்து மூவரையும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, முதலுதவி சிகிச்சையளித்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த குருநாதன் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
கம்பம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.