/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மே 23, 2025 04:35 AM
தேனி: மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு, 'SAKSHAM ECI' செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
மாவட்டத்தில் 11.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7490 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார். அனைவரும் வருகின்ற தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி கலெக்டர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை, மாற்றுத்திறாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அரசால் மாற்றுத்திறனாளிகளுக்காக உள்ள 'SAKSHAM ECI' அலைபேசி செயலி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஓட்டுச்சாவடிகளில் உள்ள சாய்தளங்கள், கட்டட பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும். மேலும் பிரெயிலி எழுத்து பதியப்பட்ட ஓட்டுச்சீட்டுகள் பற்றி, கண்பார்வை அற்றவர்களுக்கு உதவும் 49 N பற்றி தெரியப்படுத்த வேண்டும் என கலெக்டர், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'SAKSHAM ECI' இந்த செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்பட்டியலில் பதிவு செய்தல், பெயர் நீக்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி தர வழிவகை செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.