/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரீசியன் பணியிடங்கள் அவசியம் துணை முதல்வர் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
/
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரீசியன் பணியிடங்கள் அவசியம் துணை முதல்வர் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரீசியன் பணியிடங்கள் அவசியம் துணை முதல்வர் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரீசியன் பணியிடங்கள் அவசியம் துணை முதல்வர் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2025 12:25 AM
தேனி: மாவட்டத்தில் கூடலுார், கம்பம், சின்னமனுார், பெரியகுளம், தேனி, போடி ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் கூடலூரை தவிர பிற 5 நகராட்சிகளில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. பேரூராட்சிகளில் ஆண்டிபட்டியில் மட்டும் அரசு மருத்துவமனை உள்ளது.
பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த ஆறு மருத்துவமனைகளிலும் 800 படுக்கை வசதிகள் உள்ளன. பெரியகுளம் மற்றும் கம்பத்தில் மட்டுமே படுக்கை வசதிகள் கூடுதலாக உள்ளன. அதே போன்று 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் 'சீமாங்' சென்டர்கள் பெரியகுளம், கம்பத்தில் உள்ளது. கம்பம், போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் தினமும் அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு தேவையான ஜெனரேட்டர், மின் விளக்குகள், மின் விசிறிகள், ஏ.சி., அறைகள் (அறுவை சிகிசிச்சை அரங்குகள்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த மருத்துவமனைகளின் கட்டடங்கள் மிகவும் பழமையானவை. அதில் ஒயரிங் வேலைகளும் 50 ஆண்டுகளை கடந்துள்ளன. எனவே அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் போடி அரசு மருத்துவமனையில் மின்விசிறி அறுந்து, நோயாளியின் படுக்கையின் மீது விழுந்து, விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.
எனவே அரசு மருத்துவமனைகளில் மின்சார பணிகளை கவனிக்க எலக்ட்ரீசியன் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். ஆனால் எலக்ட்ரீசியன் பணியிடம் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகங்கள் சிரமத்தை சந்திக்கின்றன. அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது, தியேட்டருக்கு செல்லும் மின் பாதையில் பிரச்னை ஏற்பட்டால், வெளியே சென்று எலக்ட்ரீசியனை அழைத்து வர வேண்டி உள்ளது. மேலும் மின்விசிறிகள், ஒயர்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பராமரிப்பிற்கு கண்டிப்பாக எலக்ட்ரீசியன் பணியிடம் அவசியமாகும்.
இதுகுறித்து மருத்துவமனைகளில் விசாரித்த போது, ''பெரியகுளம், கம்பத்தில் அவுட்சோர்சிங் முறையில் கடந்த 2017ல் எலக்ட்ரீசியன், பிளம்பர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தமபாளையம், போடி, சின்னமனுார், ஆண்டிபட்டி மருத்துவமனைகளில் கிடையாது.'', என்றனர். நுாறு ஆண்டுகளை கடந்த கட்டடங்களும் அதிலுள்ள மின் சாதனங்களும் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை பராமரிக்க எலக்ட்ரீசியன் பணியிடம் அவசியம். இப்பணியிடங்களை நிரப்ப நலப்பணிகள் இயக்குநரகத்திற்கு, துணை முதல்வர் உத்தரவிட வேண்டும்.