ADDED : நவ 23, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: போடி மின்வாரிய அலுவலகத்தில் வடபுதுப்பட்டி ரஞ்சித் 30, பணிபுரிந்தார். போடியில் இருந்து டூவீலரில் தேனி நோக்கி சென்றார்.
தனியார் மில் அருகே சென்ற போது ரோட்டின் குறுக்கே நாய் சென்றதால் ரஞ்சித் திடீனெ பிரேக் பிடித்தார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மனைவி தேவதர்ஷினி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

