/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடையூறு மரக்கிளைகளை அகற்றாமல் அடிப்பகுதி வரை வெட்டிய ஊழியர்கள்: கலெக்டர் கண்டிப்பு

ADDED : ஜன 06, 2024 06:49 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் மின் வினியோகத்திற்கு இடையூறாக இருந்த மரங்களின் கிளைகளை வெட்ட கூறிய நிலையில், மரத்தின் அடிப்பகுதி வரை வெட்டியதை அறிந்த கலெக்டர் ஷஜீவனா மரம் வெட்டுவதை நிறுத்த உத்தரவிட்டார்.
தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து அலுவலகம் வரை செல்லும் ரோட்டில் இருபுறமும் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
மரங்களின் அருகே மின் ஒயர், கேபிள் ஒயர்கள் செல்வதால் சில இடையூறாக உள்ளதாக கூறி மரக்கிளைகளை வெட்ட பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் உத்தரவிட்டார்.
ஊழியர்கள் மரங்களில் ஏறி கிளைகளை வெட்டாமல் கிளைகளின் அடிப்பகுதி வரை வெட்டினர். இதனை பார்த்த கலெக்டர் உதவியாளரை அழைத்து, மரக்கிளையை வெட்ட கூறினால் மரத்தை ஏன் வெட்டுகிறார்கள் என கண்டித்து பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டன.