/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வன உயிரினங்கள்- மனித மோதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி; வனப்பகுதியில் 10 வகையான புல் வளர்க்க முடிவு
/
வன உயிரினங்கள்- மனித மோதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி; வனப்பகுதியில் 10 வகையான புல் வளர்க்க முடிவு
வன உயிரினங்கள்- மனித மோதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி; வனப்பகுதியில் 10 வகையான புல் வளர்க்க முடிவு
வன உயிரினங்கள்- மனித மோதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி; வனப்பகுதியில் 10 வகையான புல் வளர்க்க முடிவு
ADDED : பிப் 02, 2025 05:04 AM
கம்பம்: வன உயிரினங்கள் - மனிதர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும் மோதல்களை தவிர்க்கவும், வன உயிரினங்களுக்கு தேவையான சுவை மிகுந்த 10 வகை புல் வனப்பகுதியில் வளர்க்கவும் வனத்துறை திட்டம் தயாரித்துள்ளது.
வனப்பகுதிகளில் வேட்டையாடுவதை வனத்துறையினர் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
வேட்டைகள் தடுக்கப்பட்டதால், வனப்பகுதிகளில் அனைத்து வகையான வன உயிரினங்களும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவற்றிற்கு தேவையான இரை மற்றும் தீவனம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சமீபகாலமாக யானைகள், காட்டுமாடுகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தங்களது தீவனம் அல்லது இரைக்காக காடுகளை விட்டு வெளியேறி, மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால் வனஉயிரினங்கள், - மனித மோதல்கள் ஏற்பட்டு வருகிறது - இதற்கு முக்கிய காரணம் யானைகள் உள்ளிட்ட வனஉயிரினங்களுக்கு தேவையான தீவனம் வனப்பகுதிகளில் கிடைக்காததேயாகும். இதனால் தான் மனிதர்கள் வாழ்விடங்களை நோக்கி வருகின்றன.
எனவே வனப்பகுதிக்குள் தேவையான தீவனம் கிடைத்துவிட்டால், வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியே வராது.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் வனப்பொருள்கள் மற்றும் வனஉயிரின துறை , தமிழகம் முழுவதும் உள்ள 200 வனத்துறையினருக்கு சுவையான புல் வகைகளை வனப்பகுதிக்குள் வளர்ப்பது எப்படி என பயிற்சியளித்துள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் தேனி மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் வனப்பகுதிக்குள் தேவையான தீவனத்தை வளர்த்து வனஉயிரினங்கள் - மனிதர்களுக்கிடையே மோதல்களை குறைக்க முடியும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேகமலை பகுதியிலும் இதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளது என்று வனத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.