ADDED : ஜன 22, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அன்னஞ்சி முத்துமாரியம்மன் கோவில் தெரு சிவக்குமார் 51.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேப்டி இன்ஜினியாராக பணிபுரிகிறார். இவர் மதுரையில் இருந்து அரசு பஸ்சில் தேனி வந்தார். பஸ்சை மதுரை உசிலம்பட்டி மதன்குமார் 43, ஓட்டினார். கருவேல்நாயக்கன்பட்டி அருகே பஸ் வந்தபோது ரோட்டில் இருந்த பேரிகார்டில் மோதியது. இதில் சிவக்குமார் இடது கையில் ரத்தகாயம் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.