ADDED : ஜன 25, 2025 05:28 AM
தேனி :  நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் மேலாண்மை துறையின் சார்பில் 'தொழில் முனைவோர் புத்துணர்வு செழிப்பின் புதுயுகம்'என்ற தலைப்பில் 2 நாட்கள் நடந்த கருத்தரங்கு நடந்தது.
இதில் 10 கல்லுாரிகளை சேர்ந்த 150 மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். உறவின்முறை நிர்வாகிகள் ராஜமோகன், கணேஷ், ஆனந்தவேல், பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரிச் செயலர் காசிபிரபு வரவேற்றார். இதயம் குழும நிறுவனங்களில் முதன்மை நிர்வாக அதிகாரி முத்து, தொழிலதிபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான யுத்திகள் குறித்து பேசினார்.
ஓமான் நாட்டின் சிறப்பு விருந்தினர் சுரேஷ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் இண்டர்நெட் ஆப் திங்ஸ், பிக்டேட்டா பகுப்பாய்வு குறித்து விளக்கினார். கல்லுாரி இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ நன்றி தெரிவித்தார்.

