தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/வட்டவடைக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம்

வட்டவடைக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம்

வட்டவடைக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம்


UPDATED : நவ 04, 2026 11:17 AM

ADDED : நவ 04, 2026 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:17 AM ADDED : நவ 04, 2026 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு: வட்டவடைக்கு செல்லும் வாகனங்களுக்கு ஊராட்சி சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மூணாறு அருகில் வட்டவடை ஊராட்சி உள்ளது. மூணாறில் இருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ள வட்டவடைக்கு மாட்டுபட்டி, குண்டளை, டாப் ஸ்டேஷன் வழியாக செல்ல வேண்டும். அதில் எல்லப்பட்டி எஸ்டேட் பகுதியில் இருந்து டாப் ஸ்டேஷன் பகுதி வரை இரண்டு கி.மீ., தூரம் தமிழக பொதுபணித் துறையினருக்கு சொந்தமானது.

வசூல்: வட்டவடைக்கு செல்லும் வாகனங்களுக்கு ஊராட்சி சார்பில் ஊர்காடு பகுதியில் பசுமை சோதனை சாவடி அமைத்து நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டூவீலர் ரூ.30, கார் உள்பட சிறிய ரக வாகனங்கள் ரூ.50, பஸ் உள்பட கனரக வாகனங்கள் ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி தலைவர் சூர்யராஜ் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகள் குப்பை கழிவுகளை பெரும் அளவில் வீசி செல்வதால், அவற்றை அகற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குப்பை,கழிவுகள் ஆகியவற்றை வீசுவதை தவிர்க்கும் வகையில் சோதனை சாவடியில் பயணிகளுக்கு பைகள் வழங்கப்படுகிறது. அவற்றில் குப்பைகளை சேகரித்து திரும்பி வரும் போது சோதனை சாவடியில் வழங்க வேண்டும்,’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us