/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பை கிடங்கில் எரியும் தீ புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
குப்பை கிடங்கில் எரியும் தீ புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
குப்பை கிடங்கில் எரியும் தீ புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
குப்பை கிடங்கில் எரியும் தீ புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஜூன் 09, 2025 02:48 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி குப்பை கிடங்கில் பரவும் தீ, புகையால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை ஆண்டிபட்டி சுடுகாடு அடுத்துள்ள காலி இடத்தில் குவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் மக்கும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் மூலம் உரம் தயாரிப்புக்கப்படுகிறது.
மக்காத குப்பையில் பாலிதீன், பிளாஸ்டிக், ரப்பர், பாலியெஸ்டர் துணிகள் உள்பட பலவகை பொருட்கள் கலந்துள்ளன. குப்பைக் கிடங்கில் அடிக்கடி யாரேனும் தீ வைத்து செல்கின்றனர்.
தற்போது காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி நச்சுத் தன்மையுள்ள புகை மண்டலம் ஏற்படுகிறது.
இந்தப் புகை அருகில் உள்ள டி.வி. ரங்கநாதபுரம், புதுார், அய்யர் கோட்டம், ராஜகோபாலன்பட்டி, டி.சுப்புலாபுரம், அணைக்கரைப்பட்டி உட்பட பல கிராமங்களுக்கு பரவி பலருக்கும் சுவாச பாதிப்பு ஏற்படுத்துகிறது.
பற்றி எரியும் தீ, புகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை. குப்பை கிடங்கை கண்காணித்து தீ வைக்கும் நபர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.