தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பட்டாசு வெடிக்கும் போது கண் பாதுகாப்பு அவசியம்: டாக்டர் அறிவுறுத்தல்

பட்டாசு வெடிக்கும் போது கண் பாதுகாப்பு அவசியம்: டாக்டர் அறிவுறுத்தல்

பட்டாசு வெடிக்கும் போது கண் பாதுகாப்பு அவசியம்: டாக்டர் அறிவுறுத்தல்


UPDATED : நவ 07, 2026 05:26 PM

ADDED : நவ 07, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 05:26 PM ADDED : நவ 07, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் ரசாயனம் பொடிபட்டால் கண்களை தேய்க்கக்கூடாது. சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும் என தேனி மருத்துவக் கல்லூரி கண் டாக்டர் சரயுவெங்கடலட்சுமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான தூரத்தில் நின்று வெடிக்கவும். அருகில் நின்று வேடிக்கை பார்க்காதீர்கள். கண்ணில் பட்டாசு தீப்பொறி அல்லது ரசாயனம் பொடி பட்டால் கண்களை தேய்காதீர்கள். உடனடியாக குழாயைத் திறந்து சுத்தமான நீரால் கண்களை கழுவுங்கள். கண்ணில் காயம் ஏற்பட்டால் வீட்டிலேயே மருந்து போடாமல் உடனடியாக கண் டாக்டரை அணுக வேண்டும். கண்காயம் சில நேரங்களில் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தலாம். சிறுவர்களை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்கள் உடனிருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது கண்ணாடி அணிவது கண்களை பாதுகாக்க உதவும். முகத்தையும் கண்களையும் பட்டாசுகள் அருகில் கொண்டு செல்லாதீர்கள் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us