/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்களை தேடி மருத்துவக் குழுவினருடன் தொழிற்சாலை பணியாளர்கள் வாக்குவாதம்
/
மக்களை தேடி மருத்துவக் குழுவினருடன் தொழிற்சாலை பணியாளர்கள் வாக்குவாதம்
மக்களை தேடி மருத்துவக் குழுவினருடன் தொழிற்சாலை பணியாளர்கள் வாக்குவாதம்
மக்களை தேடி மருத்துவக் குழுவினருடன் தொழிற்சாலை பணியாளர்கள் வாக்குவாதம்
ADDED : ஜூலை 17, 2025 11:54 PM
உத்தமபாளையம்: மக்களை தேடி மருத்துவக்குழுவினருடன் ஆனைமலையன்பட்டி ஒயின் தொழிற்சாலை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு தொற்றா நோய்களான சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இப் பணியில் நடமாடும் மருத்துவ குழுவினர் ஈடுபட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று தேனி மாவட்டத்தில் ஆறு இடங்களில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை முகாம் நடத்தினர். இதில் ஆனைமலையன் பட்டி ஒயின் தொழிற்சாலைக்கு நடமாடும் மருத்துவக் குழுவினர் டாக்டர் ஜோதி ராஜ் தலைமையில் சென்றனர். அங்கு ஒயின் தொழிற்சாலை அலுவலர்கள் முதலில் அனுமதி மறுத்துள்ளனர். பின்னர் வேலை செய்யும் தொழிலாளர்கள் விரும்பவில்லை என கூறியுள்ளனர்.
அதற்கு டாக்டர்,' பரிசோதனைக் விரும்பவில்லை,' என எழுதிக் கேட்டுள்ளார் . இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒருமையில் பேசியதாக மருத்துவக்குழுவினர் புகார் கூறினர்.
மருத்துவக்குழுவினர் கூறுகையில், ' மருத்துவ குழுவினரை ஒரு மணி நேரம் காக்க வைத்தனர். அதன்பின் தொழிலாளர்கள் விரும்பவில்லை என்றனர். அதை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டோம். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்கு பின் பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்தனர்,' என்றனர்.
ஒயின் தொழிற்சாலையினர் கூறுகையில், 'காலையில் 9:30 மணிக்கு மருத்துவக் குழுவின் வந்தபோது தான் உற்பத்தி துவங்கியிருந்தது. அப்போது பரிசோதனை செய்தால் உற்பத்தி பாதிக்கும், ஒரு மணி நேரம் பொறுங்கள் என்றும், அதுவரை தோட்ட பணியாளர்களை பரிசோதனை செய்யுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பாக்டரியில் உள்ளவர்களை அனுப்புகிறோம் என்றோம். அதை ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்,' என்றனர்.