/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகளுக்கு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி
/
விவசாயிகளுக்கு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி
விவசாயிகளுக்கு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி
விவசாயிகளுக்கு 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி
ADDED : ஜன 26, 2024 06:23 AM
தேனி: தேனி வட்டாரத்தில் 159 எக்டேர் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.
வேளாண் இணை இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமையில் ஜங்கால்பட்டி, பூமலைக்குண்டு விவசாயிகளுக்கு ஜங்கால்பட்டியில் உள்ள பருத்தி பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் பயிருக்கு மருந்து தெளிப்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், நிலையான பருத்தி இயக்கத்தின் கீழ் 'ட்ரோன்' மூலம் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
'ட்ரோன்' தொழில் மூலம் மருந்து தெளிப்பதால் விவசாயிகளுக்கு நேரம், தண்ணீர் உள்ளிட்டவை மிச்சமாகிறது. பாதிப்புகளும் குறைவு என்றனர்.
பயிற்சி வேளாண் துணை இயக்குனர் தேன்மொழி, உதவி இயக்குனர் ராமசாமி பேசினர். வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.