ADDED : பிப் 12, 2024 05:55 AM
போடி: தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வுரிமைச் சங்க ஆலோசனைக் கூட்டம் போடி அருகே சிலமலை பெருமாள் கோயில் மண்டபத்தில் நடந்தது. தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அம்சபாண்டியன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநில சட்ட ஆலோசகர் அய்யப்பன், மாநில பொருளாளர் சங்கரநாராயணன், மாநில செயலாளர் ராமராஜ், சின்னமனூர் ஒன்றிய தலைவர் உதயசூரியன் முன்னிலை வகித்தனர். போடி ஒன்றிய தலைவர் பெருமாள் வரவேற்றார். மாநிலத் தலைவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் விவசாயம், விவசாய உரிமைகளை பாதுகாப்பது, விவசாயிகளின் முதலீடு, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்தல், உழவர் சந்தையை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கண்மாய், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை சேமிப்பது, 18 ம் கால்வாய் வரத்து வாய்க்கால்களை ஆண்டுக்கு ஒரு முறை தூர்வாருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.