/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்வளத் துறை அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
/
நீர்வளத் துறை அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
நீர்வளத் துறை அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
நீர்வளத் துறை அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : ஜன 05, 2025 06:23 AM
உத்தமபாளையம் : கம்பம் பள்ளத்தாக்கில் 2ம் போக நெல் பயிர்களுக்கு மார்ச் வரை தண்ணீர் வழங்கவும், அதற்கு தேவையான தண்ணீரை முல்லை பெரியாறு அணையில் இருப்பு வைக்க வலியுறுத்தியும் ஜன 20 ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் கூட்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் உத்தமபாளையத்தில் நடந்தது. தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். துணை தலைவர் விஜயராஜன் முன்னிலை வகித்தார். செயலாளர் சகுபர் அலி வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் நாராயணன் (கம்பம்), ராஜா ( சின்னமனூர்), ஆம்ஸ்ட்ராங் ( சீலையம்பட்டி ), கிருஷ்ணமூர்த்தி (கூடலூர்), நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், கம்பம் செயலாளர் சுகுமாறன் மற்றும் வீரபாண்டி, கோட்டூர், சத்திரப் பட்டி, வயல்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் , கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது சாகுபடி செய்துள்ள இரண்டாம் போக நெல் பயிருக்கு வரும் மார்ச் வரை தண்ணீர் தேவைப்படும்.
எனவே தேவையான அளவு தண்ணீரை முல்லை பெரியாறு அணையில் தேக்கி வைக்க வலியுறுத்தியும், அணையில் இருந்து தற்போது எடுக்கும் நீரின் அளவை குறைக்க கோரி ஜன . 20 ல் உத்தமபாளையம் நீர்வளத் துறை அலுவலகம் முன் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.