/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 26, 2024 05:31 AM

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் அறுவடைக்கு தயாராக உள்ள செங்கரும்பினை, அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க அரசு விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேவதானப்பட்டி பகுதிகளில் 120 ஏக்கருக்கும் அதிகமாக செங்கரும்பு பயிரிட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. செங்கரும்பு பத்து மாதம் பயிராகும். மஞ்சளாறு ஆற்றுப்பாசனத்தில் விளையும் கரும்பிற்கு சுவை அதிகம். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நிர்வாக செலவாகிறது.
கரும்பு விவசாயி, காமாட்சி கூறுகையில்,' அறுவடை நேரத்தில் 10 கரும்புகள் எண்ணிக்கை கொண்டஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 க்கு வியாபாரிகள் கேட்கின்றனர். ஆனால் இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது.
கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்க அரசு ஒரு கட்டு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.500 க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றோம்', என்றார்.