/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனீக்கள் கொட்டி விவசாயி பலி தொழிலாளர்கள் 20 பேர் காயம்
/
தேனீக்கள் கொட்டி விவசாயி பலி தொழிலாளர்கள் 20 பேர் காயம்
தேனீக்கள் கொட்டி விவசாயி பலி தொழிலாளர்கள் 20 பேர் காயம்
தேனீக்கள் கொட்டி விவசாயி பலி தொழிலாளர்கள் 20 பேர் காயம்
ADDED : பிப் 17, 2024 05:59 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே கோரம்பாறையில் தேனீக்கள் கொட்டி விவசாயி பலியாகினார்.
போடி அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் 60. இவருக்கு கோரம்பாறையில் ஏலத் தோட்டம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை ராமசந்திரனை தேனீக்கள் கூட்டமாக கொட்டின.
அவற்றிடம் இருந்து தப்ப வீட்டிற்குள் ஓடியவரை விடாமல் தேனீக்கள் விரட்டின. தேனீக்கள் கொட்டி பலத்த காயமடைந்தவரை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்தார்.
சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
பலத்த காயம்: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான நல்லதண்ணி எஸ்டேட் குருமலை டிவிஷனில் தேனீக்கள் கொட்டி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர் பலத்த காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேயிலை தோட்டத்தினுள் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் தொழிலாளர்களை கொட்டின.
அதில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். மூணாறில் டாடா மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.