/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செங்கல் சூளைகளால் விவசாயம் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
/
செங்கல் சூளைகளால் விவசாயம் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
செங்கல் சூளைகளால் விவசாயம் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
செங்கல் சூளைகளால் விவசாயம் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
ADDED : டிச 31, 2024 06:37 AM
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் செங்கல் சூளையால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நில அலுவலர் வெங்கடாசலம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் தர்மாபுரி, தென்பழனியை சேர்ந்த 130க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க கோரி மனு வழங்கினர்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அனுகிரஹா நகர் பொதுமக்கள் சார்பாக தர்மேந்திரன் வழங்கிய மனுவில், குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள களத்தில் கம்பு, சோளம் காய வைக்கின்றனர். இவற்றில் இருந்து வரும் துாசியால் அப்பகுதியில் வசிப்போருக்கு உடல்நலக்கோளாறு ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்தது.
ஆண்டிபட்டி தங்கம்மாள்புரம் குமுதம் வழங்கிய மனுவில், 'எங்கள் பகுதியில் செயல்படும் செங்கல் சூளையால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. விவசாய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'. என கோரினார்.
நாட்டின் எல்லை போர் நடவடிக்கையில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர் ராஜபாண்டியன் மகள் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம், ரூ.ஒருலட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
ஆர்ப்பாட்டம்கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாக கண்ணன் தலைமையில் தேனி ஒன்றியம் தர்மாபுரி, சின்னமனுார் ஒன்றியம் தென்பழனி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.