ADDED : பிப் 12, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நேருசிலை அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் புதிய உணவு கொள்கையை கைவிட வேண்டும். நெல், வேளாண் விளைப் பொருட்களை மாநில அரசே கொள்முதல் செய்திட வேண்டும். தேனி ராஜவாய்க்காலில் இருபுறங்களில் சிமென்ட் சுவர் அமைத்திட வேண்டும். 2024 டிசம்பரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர் விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ்குமார், பாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்டத் தலைவர காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.